Friday, September 29, 2023
Home இந்தியா இந்தியாவில் ஒரே நாளில் 49,310 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த உயரிழப்பு 30,601

இந்தியாவில் ஒரே நாளில் 49,310 பேருக்கு கொரோனா பாதிப்பு – மொத்த உயரிழப்பு 30,601

டெல்லி

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 49,310 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில பரவி வருகிறது. கடந்த இரு நாட்களாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் உயரிழப்பு எண்ணிகை பிரேசில் அமெரிக்கா நாடுகளை போல் உச்சமாகி வருகிறது. தினமும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

இந்தியாவில இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 49,310 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 4,40,135 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33,326 பேர் குணம் அடைந்ததால், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8,17,209 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஒரே நாளில் 740 பேர் மரணம் அடைந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,601 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிராவில் 9,895 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு 3,47,502 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் ஒரே நாளில் 6,484 அதிகரித்துள்ளது. இது வரை மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து 1,94,253 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 12,854 பேர் உயிரிழந்துள்ளனர்.

2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு நேற்றுஒரே நாளில் 6,472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5,210பேர் குணம் அடைந்தனர். இதனால் மொத்த குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,36,793 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 52,939 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 3,232 பேர் உயிரிழந்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments