கொரோனா தொற்றுக்கு உள்ளான விஷாலும் அவருடைய தந்தையும் ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் குணமாகியுள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதிகாரபூர்வமாக யாரும் வெளியே தெரிவிக்கவில்லை. சமீபத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மட்டும் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, தற்போது விஷாலுக்கும் அவருடைய அப்பா ஜி.கே.ரெட்டிக்கும் கொரோனா தொற்று இருந்திருக்கிறது. சுமார் 20 நாட்களுக்கு முன்பு, முதலில் விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவரை கவனித்துக் கொள்ளும் போது விஷாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இருவருமே தற்போது முழுமையாக குணமாகிவிட்டதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் முழுமையாக ஆயுர்வேத மருந்துகள் மூலமே குணமாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.