Monday, October 2, 2023
Home உலகம் டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் - டிரம்ப் அறிவிப்பு

டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் – டிரம்ப் அறிவிப்பு

சீனாவை சேர்ந்த டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இத்தடை தொடர்பாக உத்தரவில் இன்று (சனிக்கிழமை) கையெழுத்திட உள்ளதாகச் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.

சீனாவின் மிக பெரிய தொழில் நுட்ப நிறுவனமான “பைட் டான்ஸ்” நிறுவனம் டிக் டாக் செயலியை நடத்தி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்ட டிக் டாக் செயலி பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

சீன அரசால் இயக்கப்படுவதாகவும், சீனா அரசுக்குத் தரவுகளை அளிப்பதாகவும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை டிக் டாக் மறுத்து வருகிறது.

அமெரிக்காவில் 80 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ள டிக் டாக், அங்கு வேகமாக வளர்ந்து வந்தது. தற்போது இந்த தடை பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக கருதப்படுகிறது.

டிக் டாக் மீதான தடை எவ்வாறு செயல்படுத்தப்படும், அது என்ன சட்ட சவால்களை எதிர்கொள்ளும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், டிரம்ப் அரசு இதற்கு அனுமதிக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை மீறி ஒரு வேளை மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக்கை வாங்கினால், பைட் டான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து வெளியேறும் என தகவல்கள் கூறுகின்றன.

டிரம்பின் தடை அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்க டிக் டாக்கின் ஒரு செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments