Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவ்வபோது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதும், தற்போது அன்லாக்டவுன் அறிவிக்கப்படும்போதும், அதற்கு முன்பாக ஒவ்வொரு முறையும் அமித் ஷா விரிவாக ஆலோசனை மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், தமக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அமித் ஷா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், தமக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரைபடி அதனை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டதில், தற்போது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தாலும் தமது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும், விரைவில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தமது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து, அண்மையில் அவருடன் தொடர்பில் இருந்த துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments