Sunday, July 3, 2022
Home தமிழகம் எஸ்.வி.சேகர் எதையாவது பேசுவார், வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார் - எடப்பாடி பழனிச்சாமி

எஸ்.வி.சேகர் எதையாவது பேசுவார், வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார் – எடப்பாடி பழனிச்சாமி

சென்னை

“எஸ்வி சேகர் எதையாவது பேசுவார், வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ஜெயலலிதா காலத்தில், அதிமுகவில் சேர்ந்து எம்.எல்.ஏவானவர் நடிகர் எஸ்.வி.சேகர். பிறகு அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பா.ஜ.க ஆதரவாளராக உள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், அண்ணா தி.மு.க என்ற பெயரில் அண்ணாவை நீக்கி விட்டால் மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அம்மா என்ற பெயரை அண்ணாவுக்கு பதிலாக சேர்த்துக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களிலும் அ.தி.மு.கவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.வி.சேகர் தனது சம்பளப் பணத்தை திருப்பி செலுத்த முடியுமா, ஓய்வூதிய பணத்தை திரும்ப கொடுப்பாரா என்று அடுக்கடுக்காக ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், நான் உழைத்து சம்பாதித்த பணத்தை எதற்கு திருப்பி தர வேண்டும் என்று எஸ்.வி.சேகர் பதில் வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில், இன்று, திண்டுக்கல் வருகை தந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது எஸ் வி சேகர் கருத்து பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது.

முதல்வருக்கு இந்தி தெரியும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். எங்களுக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். முதலில் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? பா.ஜ.கவை சேர்ந்தவரா? அப்படியானால் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவே இல்லையே. லோக்சபா தேர்தலின்போது அ.தி.மு.க மற்றும் எங்களுடைய கூட்டணியைச் சேர்ந்த பா.ஜ.க இணைந்து தேர்தலை சந்தித்தோம். அப்போது எங்கேயுமே அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லை.

முன்பு அவர் அ.தி.மு.கவில்தான் இருந்தார். அ.தி.மு.கவைதான் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். சரியான முறையில் கட்சிக்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால், “அம்மா” அவரை நீக்கினார். எனவே அவருக்கு பதில் சொல்லதேவையில்லை. அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக நான் நினைக்கவில்லை. ஏனெனில், எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார், பிறகு வழக்கு வந்தால், ஓடி ஒளிந்து கொள்வார். இவ்வாறு கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

- Advertisment -

Most Popular

ஈரானில் பயங்கர நிலநடுக்கம் – 3 பேர் பலி பலர் படுகாயம்

ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் இன்று (ஜூலை 2) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...

7 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 12.28 கோடி

7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை - சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தொடங்கியது முதல்...

மணிப்பூர் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். துபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இதுவரை 13 பேர் உயிருடன்...

சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அரசை கவிழ்த்தார். பின்பு பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்த...

Recent Comments