Monday, December 4, 2023
Home வர்த்தகம் இந்திய நிறுவனம் தயாரித்த ஏகே-ரக துப்பாக்கி

இந்திய நிறுவனம் தயாரித்த ஏகே-ரக துப்பாக்கி

இந்திய தனியார் நிறுவனம் ஒன்று புதிய ரைபிள் ஒன்றை மேம்படுத்தியுள்ளது.ஏகே-47 ரக துப்பாக்கிகளை விட இந்த புதிய துப்பாக்கிகள் சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஏகே ரக துப்பாக்கிகளை இந்திய இராணுவம் அதிக அளவில் உபயோகித்து வருகிறது.இந்திய விரைவில் இந்தியாவில் ஏகே தயாரிப்பு தொழில்சாலை ஒன்று ஏற்படுத்தி கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏகே-203 துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது.

பெங்களூருவில் இயங்கும் SSS Defence என்ற நிறுவனம் 7.62×39 ரைபிள் ஒன்றை மேம்படுத்தியுள்ளது “7.62×39 SSS Defence Weapon” என அழைக்கப்படும் ரைபிளை மேம்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே மேம்படுத்தியுள்ள P-72 Rapid Engagement Combat Rifle (RECR) என்பதனை மாற்றி உருவாக்கியுள்ளது.

இது குறித்து பேசிய SSS Defence சி.இ.ஓ விவேக் கிருஷ்னன, ஒரு நவீன இராணுவத்திற்கு ஏகே-203 ஏற்புடையதாக இருக்காது எனவும் சாதாரண இன்பான்ட்ரி வீரர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஆனால் சிறப்பு படைகள் ஏகே-203ஐ அதிக அளவு உபயோகிக்குமா என்பது சந்தேகமே என கூறியுள்ளார்.இதற்காக நாங்கள் AK வகை ஒன்றை உருவாக்கியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

7.62×39 ரக ரைபிள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா தடை பிறப்பித்துள்ளதால், எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என அவர் கூறியுள்ளார். ஏகே-203ல் இல்லாத அம்சங்கள் எங்களது துப்பாக்கியில் உள்ளது. ஏற்கனவே படையில் உள்ள துப்பாக்கிகளை அப்கிரேடு செய்துள்ளதாகவும், இதன் இறுதி முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments