Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்வட மாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட கோருவதை தமிழக அரசு ஏற்க...

வட மாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட கோருவதை தமிழக அரசு ஏற்க கூடாது – சீமான்

சென்னை

வடமாநிலத்தவர் விழாவுக்காக்க தமிழகத்தில் 10 நாட்கள் இறைச்சி கடைகளை மூட கோருவதை தமிழக அரசு ஏற்க கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வடமாநிலத்தவர் கொண்டாடும் விழாவிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் 10 நாட்களுக்கு இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று வடமாநிலத்தவர் நலச்சங்கம் சார்பாக வழக்குத் தொடர்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா உள்ளிட்ட வட மாநில விழாக்களுக்குத் தமிழர்களின் பெருந்தன்மையால் தமிழகத்தில் விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் தமிழர் திருநாளான பொங்கல், முப்பாட்டன் முருகனைப் போற்றும் தைப்பூசம் உள்ளிட்ட எந்த வகையான தமிழர் விழாக்களுக்கும் விடுமுறை கூட அளிப்பதில்லை என்பது மற்ற மாநிலங்களில் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களுக்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கும் எத்தகைய மதிப்பு வழங்கப்படுகின்றன என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

கொல்லாமையைப் போதித்த மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏற்கனவே ஒரு நாள் இறைச்சிக்கடைகள் தமிழகத்தில் மூடப்படுகிறது. அதைத் தமிழர்கள் நாம் இதுவரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம் என்பது நமது பெருந்தன்மை. அதற்காகத் தொடர்ந்து பத்து நாட்கள் தமிழர்கள் அனைவரும் இறைச்சி உண்ணக்கூடாது என்று சட்டத்தின் மூலம் அடக்குமுறைக்குள்ளாக்க துணிவது தமிழர்களின் உணவை, உணர்வை, உரிமையைப் பறிக்கின்ற கொடுஞ்செயலாகும். இங்கு வந்து குடியேறி, தமிழர்களின் வரிப்பணத்தில் எல்லாவித சலுகைகள், அரசின் திட்டங்களையும் எவ்வித பாகுபாடுமின்றிப் பெற்றுக்கொண்டு, வளமோடு வாழவைத்த தமிழர்களுக்கு வடமாநிலத்தவர்கள் செய்யத் துணியும் துரோகமாகும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments