Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஇன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி நித்தியானந்தாவின் நகைச்சுவை அறிவிப்புகள்

இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி நித்தியானந்தாவின் நகைச்சுவை அறிவிப்புகள்

கைலாசா என்றொரு நாடு எங்கே இருக்கிறதென்று எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அனால் அப்படி ஒரு நாடு உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இதில் இந்திய அரசு வெட்கப்பட வேண்டியதென்னவென்றால், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி நித்யானந்தாவால் தினசரி இணையதள வகுப்புகள் நடத்த முடிகிறது, ஒரு நாட்டையே உருவாக்கியுள்ளதாக அறிவிக்க முடிகிறது. ஆனால் இந்திய அரசால் அந்த குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை.

தேடப்படும் குற்றவாளி நித்யானந்தாவால் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கைலாச நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். நித்தியானந்தா உருவாக்கியிருக்கும் கைலாசா தீவின் கரன்சிகள் மற்றும் ரிசர்வ் வங்கி விபரம் உள்ளிட்டவை விநாயகர் சதுர்த்தி முதல் வெளியிடப்படும் என்று நித்யானந்தா அறிவித்திருந்த நிலையில், கைலாசாவின் கரன்சிகள் எப்படி இருக்கும் ரிசர்வ் வங்கி கொள்கை எப்படி இருக்கும் என்பது குறித்த ஆர்வம் பலருக்கும் தோன்றியது.

இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதன்படி 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படும் என்றும் இந்த 56 நாடுகளில் எதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ? அதுபோன்ற நடவடிக்கை கைலாசாவில் இருக்கும் என்று குறிப்பிட்ட நித்யானந்தா ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா ஆகிய பல்வேறு நாடுகளை அவர் இந்து நாடு என்றும் குறிப்பிட்டிருந்தார். இவையெல்லாம் அடங்கியவை அகண்ட பாரதம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நாடுகளுடன் கைலாசாவுக்கு வர்த்தக தொடர்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கைலாசத்தின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் என அனைத்தும் தங்கத்தில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள நித்தியானந்தா, தங்கம் என்பது ஒரு உலோக மட்டும் கிடையாது, அது புனிதம் வாய்ந்தது என்றும் கைலாசாவின் கரன்சிகள் அனைத்தும் தங்கத்திலேயே அச்சடிக்கப்படும் என்றும், குறிப்பாக இந்த கரன்சிகள் சமஸ்கிருதத்தில் சொர்ண முத்ரா என அழைக்கப்படும், தமிழில் பொற்காசு என்று ஆங்கிலத்தில் டாலர் என்றும் அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த கரன்சிகள் அனைத்தும் 1 காசு, 2 காசு, 3 காசு, 4 காசு, 5 காசு என மதிப்பீடுகளை கொண்டு அச்சடிக்கப்படும், அதே நேரத்தில் ஒரு டாலரில் 1.66 கிராம் தங்கம் இருக்கும், 25 முதல் 30 வரிகளில் இந்த கரன்சிகள் அச்சடிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், வேதம் மற்றும் ஆகம விதிகளைப் பின்பற்றி கைலாசாவின் பொருளாதாரக் கொள்கைகள் இருக்கும் என்றும் விநாயகர் சதுர்த்தி அன்று இதெல்லாம் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments