சென்னை
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
அ.தி.மு.க அரசு ஆண்மையான அரசு எச்.ராஜா சொன்ன சொற்கள் அவருக்குத்தான் பொருந்தும். ஒரு டுவிட்டர் பதிவை போட்டு விட்டு ஓடி ஒளிந்து கொண்டவர் ஹெச்.ராஜா. ஹெச்.ராஜாவின் ஆண்மை குறித்து அனைவருக்கும் தெரியும்.
அதிமுகவினரை ஹெச்.ராஜா உரசிபார்க்கக்கூடாது வரலாறு தெரியாமல் இன்றைய தலைமுறையை ஏமாற்றி வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்ற அறிவுரைகளை பின்பற்றுவோம் என்று அவர் கூறினார்.