டெல்லி
இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 29,73,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்த பாதிப்பு 30 லட்சத்தை நெருங்குகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் இந்தியாவில் செய்யப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியை தழுவி உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் தினசரி தொற்று அதிகம் வருகிறது. தினமும் சராசரியாக இந்தியாவில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் கண்டறியப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 69,039 பேர் கொரோனா காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் சராசரியாக இந்தியாவில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் கண்டறியப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 69,039 பேர் கொரோனா காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 55,928 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 953 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இந்தியாவில் 22,20,799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 6,96,641 நோயாளிகள் தற்போது இந்தியாவில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.