டெல்லி
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 82,507 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 17,433 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிக மோசமாகி வருகிறது. இந்தியாவில் புதன்கிழமை ஒருநாளில் மட்டும் 82,507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,48,615 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 67,486.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29,67,396. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,13,136.
நாட்டில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் புதன்கிழமை மட்டும் 17,433 பே ருக்கு கொரோனா உறுதியானது. மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,25,739 ஆகும். புதன்கிழமையன்று 292 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் மரணங்கள் எண்ணிக்கை 25,195 ஆகும்.
மகாராஷ்டிராவை தொடர்ந்து ஆந்திராவில் 10,392 பேருக்கும் கர்நாடகாவில் 9,860 பேருக்கும் புதன்கிழமையன்று கொரோனா உறுதியானது. தமிழகத்தில் 5,990 பேருக்கும் உ.பி.யில் 5,682 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக கர்நாடகாவில் புதன்கிழமையன்று 113 பேர் உயிரிழந்தனர்.