கேரளாவுக்கு, வெளிமாநில பயணியர் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்தது ரத்து செய்யப்பட்டு, வெளிமாநில பயணியர் வந்து செல்ல, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்திலிருந்து வருவோர், கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடியில், பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அந்த விபரங்கள், “கோவிட் — 19” முன்னெச்சரிக்கை தொடர்பான பிரத்யேக இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பயணியர் மொபைல் போனுக்கு தகவல் வந்த உடன், கேரளா செல்ல அனுமதிக்கப்படுவர்.
இதனால், மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட அவசர தேவைக்கு, கேரளா செல்லும் தமிழக, கர்நாடக மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.