ஆகஸ்ட் 31 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் நேற்று இரவு 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி பரிசோதனையில், தொற்று இல்லை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய அமித்ஷாவுக்கு, மூச்சு விடுவதில் சிமம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 31-ல் டிஸ்சாரஜ் ஆன அமித்ஷா மீண்டும் 3 -வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் உள்ள நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.