Saturday, March 25, 2023
Home தமிழகம் அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் - அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு

அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் – அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு

அ.தி.மு.கவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் இணைந்து அறிவிக்க உள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்ற செயற்குழுவில் பேசிய மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செயற்குழுவிலேயே முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது, ஏற்கெனவே முடிவெடுத்தபடி வழிகாட்டுதல் குழுவை அமைத்த பிறகு முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்யலாம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி யோசனை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் அமைச்சர்கள் சிலர் தற்போதுள்ள சூழலே தொடர விருப்பம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். தொடர்ந்து சுமார் 5மணி நேரமாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது வரும் 7ந் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்து அறிவிப்பார்கள் என்றார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments