Friday, April 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாதவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது - எஸ்.பி.பி. சரண் வேதனை

தவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது – எஸ்.பி.பி. சரண் வேதனை

மறைந்த பாடகர் எஸ்.பி.பி மருத்துவச் செலவு குறித்தும் எம்ஜிஎம் மருத்துவமனை குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவலுக்கு எஸ்.பி.சரண் முகநூல் வாயிலாக விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி யின் மருத்துவ செலவு குறித்து சமூக வலைத்தளங்களில் சில தகவல் வந்தவண்ணம் உள்ள நிலையில், அவை தற்போது இணையத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது, அதுகுறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் விளக்கமளித்துள்ளார்.

அதில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு எங்கள் குடும்பம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தவறான தகவல் பரப்பும் அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ’கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று பேசியுள்ள அவர், எனது தந்தை மருத்துவச் செலவு குறித்து விரைவில் எம்.ஜி.எம் மருத்துவமனை மற்றும் நாங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.தவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் எஸ்பிபி மகன் சரண் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments