பெங்களூர்: விவசாய சட்ட மசோதாவுக்கு எதிராக கர்நாடகாவில் இன்று பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களில் லாரிகளில் சாரை சாரையைாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்கள், கர்நாடக பாஜக அரசு பிறப்பித்துள்ள விவசாயத் துறை சார்ந்த அவசர சட்டம் ஆகிவற்றுக்கு எதிராக கர்நாடகாவில் இன்று விவசாய அமைப்புகள் இணைந்து பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்க அரசு மறுத்துவிட்டது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களால் கேஎஸ்ஆர்டிசி அமைப்பு 1200 பேருந்துகள் இயக்கத்தை இன்று ரத்து செய்தது.
பிற பகுதிகளில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கினாலும், மக்கள் கூட்டம் இல்லாமல் பஸ்கள் வெறிச்சோடி காணப்பட்டன.