Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகொரோனா தொற்றால் 1 லட்சம் உயிரிழப்புகளை சந்தித்த 3-வது நாடு இந்தியா

கொரோனா தொற்றால் 1 லட்சம் உயிரிழப்புகளை சந்தித்த 3-வது நாடு இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து உலக அளவில் கொரோனா தொற்றால், 1 லட்சம் உயிரிழப்புகளை சந்தித்த 3வது நாடு எனும் இடத்தை இந்தியா அடைந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, செப்டம்பரில் மட்டும் இந்தியாவில் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த எண்ணிக்கையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் சுமார் 37 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 9,500 பேரும், கர்நாடகாவில் 9 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 64 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 54 லட்சம் பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments