புரட்டாசி மாதத்தில் பொதுவாக திருமணங்கள் நடப்பதில்லை. ஐப்பசி மாதத்தில் தான் அடுத்து முகூர்த்தங்கள் இருக்கும். அப்போது திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும். இந்நிலையில் பல மாதங்களாக லாக்டவுனால் தள்ளிப்போன பல திருமணங்கள் இப்போது தான் நடைபெற உள்ளன.
இந்த சூழலில் தங்க நகைகள் விலை சரசரவென குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.384 குறைந்தது. இதனால் சவரன் ரூ.38 ஆயிரத்து 400க்கு வந்துள்ளது. வரும் வாரங்களில் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காரணமாக தங்கம் விலை வெறும் ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது
தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காரணமாக தங்கம் விலை வெறும் ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது.
உச்சபட்சமாக கடந்த செப்டம்பர் 28ம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 37920க்கு விற்பனை ஆனது. ஆனால் அடுத்த நாளே சுமார் 600 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 38500ஐ தொட்டது. அதன்பிறகு கொஞ்சம் ஏறுவது பின்னர் இறங்குவதுமாக உள்ளது, 300 முதல் 400 ரூபாய் வரை ஏற்ற இறக்கங்களை தங்கம் தினசரி சந்தித்து வருகிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று 4,850 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் விலை 38 ஆயிரத்து 800 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.384 சரிந்து தற்போது ரூ.38416க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 48 ரூபாய் சரிந்து 4802 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை சரிவால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு நேற்று 64 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையானது. ஆனால் இன்று 600 ரூபாய் சரிந்து 64 ஆயிரத்து 100 ரூபாயாக விற்பனையாகிறது.