Sunday, August 7, 2022
Home இந்தியா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் - இண்டிகோ

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் – இண்டிகோ

தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் ஒன்று நேற்று சென்றது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார். இவருக்கு பிரசவத்திற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில் விமானத்தில் சென்றபோது முன்னதாகவே திடீரென பிரசவ வழி வந்துள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் பறக்கும் விமானத்திலேயே ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “6E 122 டெல்லி – பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. மாலை 7:40 மணிக்கு விமானம் தரையிறங்கியது. அனைத்து செயல்பாடுகளும் இயல்பானவை. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களை வாழ்த்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விமானத்தில் குழந்தை பிறந்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இண்டிகோ விமானத்தில் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இண்டிகோ விமானத்தில் இலவசமாக பயணிக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisment -

Most Popular

மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் பலியான சோகம்

மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள விதிஷா, சத்னா மற்றும் குணா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில்...

காமன்வெல்த் – இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள்

காமன்வெல்த் 2022 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பாக்சர் அமித் பங்கல் 48 - 51 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும்...

சீனாவில் சிக்கித் தவிக்கும் 80,000 சுற்றுலா பயணிகள்

சீனாவின் பிரபல சுற்றுலா தளமான ஹைன் தீவில் 80,000 சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். கொரோனா காரணமாக அங்கு வார இறுதி நாட்களில் விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப்...

குடியிருந்த வீட்டை விற்று தையல் போடாத தேசியக் கொடி – நெசவாளியின் தேசபக்தி

தையல் போடாத தேசியக்கொடியை உருவாக்க ஏழை நெசவுத் தொழிலாளி ஒருவர் வீட்டை விற்று அத்தேசியக்கொடியை தயாரித்துள்ளார். அவரின் இந்தச் செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். நாட்டின் 75...

Recent Comments