Monday, June 5, 2023
Home உலகம் பின்லாந்து நாட்டில் ‘ஒரு நாள்’ பிரதமராக பதவி வகித்த 16 வயது சிறுமி

பின்லாந்து நாட்டில் ‘ஒரு நாள்’ பிரதமராக பதவி வகித்த 16 வயது சிறுமி

ஹெல்சிங்கி

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது 34) என்ற பெண் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

அந்த வகையில் அவர் ஒருபடி மேலே போய் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார். சர்வதேச பெண் குழந்தைகள் தினம், 11 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, ஆவா முர்டோ ஒரு நாள் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது. அந்த வகையில் பின்லாந்தில் 4-வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது.

இதையொட்டி பிரதமர் சன்னா மரின் பேசுகையில், தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இறுப்பதை உறுதி செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், அவை நாடுகளுக்கு இடையே அல்லது சமூகங்களுக்குள் டிஜிட்டல் பிளவுகளை ஆழப்படுத்தக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments