Thursday, May 19, 2022
Home இந்தியா உத்திர பிரதேசத்தில் அரங்கேறிய மற்றொரு பாலியல் வன்கொடுமை

உத்திர பிரதேசத்தில் அரங்கேறிய மற்றொரு பாலியல் வன்கொடுமை

நாடு முழுவதும் ஹத்ராஸ் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் உத்திர பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் வளாகத்திற்குள் பதினேழு வயது சிறுமி ஒருவரை அந்த கல்லூரியின் மாணவர்கள் சிலர் குழுவாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என போலீசார்தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்குள்ள ஜான்சி கல்லூரியில் உத்திர பிரதேச சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வுகள் நடைபெற்ற போது அரங்கேறியுள்ளது. அதே வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சிறுமியின் அழுகுரலை கேட்டு அவரை மீட்டு சிப்ரி பஜார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சுமார் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த தன்னை வலுக்கட்டாயமாக கல்லூரிக்குள் இழுத்துச் சென்று பலாத்தகாரம் செய்ததாகவும், தன்னிடமிருந்த 2000 ரூபாயை பறித்துக் கொண்டதோடு இதனை யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் அப்லோட் செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் புகாரும் கொடுத்துள்ளார்.

முதற்கட்டமாக எட்டு மாணவர்களை போலீசார் கைது செய்த்துள்ளனர். அதில் இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376D, 395, 386, 323, 120B மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக எஸ்.எஸ்.பி தினேஷ் குமார் சொல்லியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கின்ற அந்த சிறுமி அங்கு ஏன் வந்தார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கவும், குற்றபத்திரிக்கையை விரைவாக தாக்கல் செய்யும் படி காவல் துறையினருக்கும் ஜான்சி மாவட்ட மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் எனவும், இந்த வழக்கு தொடர்பாக போலீசாரோடு ஒத்துழைக்க கல்லூரி நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அந்த கல்லூரியின் முதல்வர்.

- Advertisment -

Most Popular

ஷவர்மா ஆபத்தான உணவா?

ஷவர்மாவை சூடாக்கும்போது வெளியில் உள்ள பகுதி மட்டுமே வேகிறது. இறைச்சி போதிய அளவில் வேகாமல் உள்ளதுதான் பிரச்சனை. கோழிக் கறியைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே வைத்திருப்பதால் அவை கெட்டுப் போகின்றன. வெளிநாட்டு...

ஆந்திராவில் 3 ஐஏஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சிறை

ஆந்திராவில் 2019ம் ஆண்டு கிராம வேளாண்மை உதவியாளர் பதவிக்கு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிகுமாறு வழக்கு ஒன்றில் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும்...

ஆன்மீகவாதி கருத்து சொல்லக்கூடாதா? – மதுரை ஆதீனம்

குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள். ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத...

முதல் எலெக்ட்ரிக் கார் – முன்பதிவு தொடங்கியது

இந்தியாவில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கியா நிறுவனம் முதல் EV6 என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் மிகவும் எளிமையானதாகவும், நவீன...

Recent Comments