இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய வடக்கு கிழக்கு போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், அத்தனை தமிழர்கள் செத்து மடிந்த நாளில், போரை வெற்றிகரமாக முடித்ததற்காக மகிந்த ராஜபக்சேவுக்கு முத்தையா முரளிதரன் நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டனர்.
அதே போல் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த கோரிக்கைகள் எழுந்த போது, இங்கே அமைதி நிலவுவதாக முத்தையா முரளிதரன் கூறியதாகவும், கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து அவர் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினர்.