Wednesday, March 29, 2023
Home தமிழகம் சென்னையில் காய்கறி விலை உயர்வு

சென்னையில் காய்கறி விலை உயர்வு

சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதால் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறது. வாரத்தின் முதல் நாளான இன்றும் கடும் விலையேற்றம் காணப்படுவதால் சென்னை வாசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று (அக்டோபர் 19) 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 25 ரூபாயாக மட்டுமே இருந்தது.

வெங்காயம் விலையும் 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 50 ரூபாயாக இருந்தது. அவரைக்காய் விலை 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் விலை 30 ரூபாயாகவும், பீட்ரூட் விலை 50 ரூபாயாகவும், கத்தரிக்காய் விலை 20 ரூபாயாகவும் உள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:
தக்காளி – ரூ.45
அவரைக்காய் – ரூ.45
பீன்ஸ் – ரூ.45
பீட்ரூட் – ரூ.30
பாகற்காய் – ரூ.30
கத்தரிக்காய் – ரூ.20
முட்டைகோஸ் – ரூ.25
குடை மிளகாய் – ரூ.40
கேரட் – ரூ.80
காளிபிளவர் – ரூ.30
சவுசவு – ரூ.12
தேங்காய் – ரூ.35
வெள்ளரிக்காய் – ரூ.12
முருங்கைக்காய் – ரூ.55
இஞ்சி – ரூ.70
பச்சை மிளகாய் – ரூ.35
கருணைக் கிழங்கு – ரூ.25
கோவைக்காய் – ரூ.15
வெண்டைக்காய் – ரூ.25
மாங்காய் – ரூ.55
நூக்கல் – ரூ.23
வெங்காயம் – ரூ.70
உருளைக் கிழங்கு – ரூ.40
முள்ளங்கி – ரூ.15
புடலங்காய் – ரூ.20
சுரைக்காய் – ரூ.20

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments