ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கொரோனா வைரஸ் பரவலின் 2ம் அலை தொடங்கியதையடுத்து அங்கு 6 மாத காலத்திற்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்ரிட் நகரில் கூடிய போராட்டக்காரர்கள், சாலைகளில் இருந்த குப்பைத்தொட்டிகளுக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற போலீசாரின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.