Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று இரவு 11.15 மணி அளவில் காலமானார்.

முதலமைச்சர் பழனிசாமி தாயார் மறைவையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக, அக்டோபர் 13 அன்று வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, உடனடியாக அவர் விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துவரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவை காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சைகள் தரப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆகவே, அதற்கும் சேர்த்து மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டன.

அப்போது அமைச்சர் துரைக்கண்ணுவிடம் வீடியோ கால் வழியாகப் பேசி நலம் விசாரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சருக்குத் தரப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் பேசினார். இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைக் கொண்ட அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவிகிதம் அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னது மருத்துவ மனை நிர்வாகம். பிறகு அவருக்கு எக்மோ சிகிச்சை தரப்பட்டது. ஆனால் அந்த சிகிச்சைகள் பலனளிக்காமல் நேற்று அக்டோபர் 31 இரவு 11.15 மணியளவில் மரணமடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments