Friday, September 29, 2023
Home சினிமா மகன் விஜய்க்காக சினிமா தொழிலையே விட்டுவிட்டேன் - எஸ்.ஏ.சந்திரசேகர்

மகன் விஜய்க்காக சினிமா தொழிலையே விட்டுவிட்டேன் – எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டு கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் விஜய் மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டுவிட்டார்.

தந்தை சந்திரசேகருடனான உறவை முறித்துகொள்வதாகவும் இனி அவருக்கும் எனக்கும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை எனவும் நற்பணிமன்றத்திலிருந்து யாரும் பணி செய்ய வேண்டாம் எனவும் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்ப்போது இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “நான் விஜய்க்காகவே வாழ்ந்து வருகிறேன், அவரை நல்ல நடிகனாக வளர்க்க என் தொழிலையே விட்டுவிட்டு கூலிக்காரன்போல பியூன்வேலை பார்த்துள்ளேன்’’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்த குடும்ப விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments