Sunday, October 1, 2023
Home சினிமா திருட்டு இணையதளத்தில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் முழு படமும் வெளியானது - படக் குழுவினர் அதிர்ச்சி

திருட்டு இணையதளத்தில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் முழு படமும் வெளியானது – படக் குழுவினர் அதிர்ச்சி

திருட்டு இணையதளங்களில் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் உடனுக்குடன் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் படங்களும் தற்போது திருட்டு இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

சூர்யா நடித்து கடந்த 12-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படம் சில மணி நேரத்திலேயே திருட்டு
இணையதளத்திலும் வெளியானது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையில் ஓ.டி.டி. தளத்தில் ரிலீசான நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படமும் திருட்டு இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

பக்தி படமாக தயாராகி உள்ள இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். ஓ.டி.டி. தளத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே மூக்குத்தி அம்மன் முழு படத்தையும் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு இணையதளங்கள் அடிக்கடி முகவரியை மாற்றுவதால் அதை தடுப்பது சவாலாக உள்ளது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments