திருப்பதியை அடுத்து திருச்சானூரில் உள்ள அக்கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று கோயில் வளாகத்தில் உள்ள வாகன மண்டபத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடவும்,அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்கவும் மோகினி அவதாரத்தில் பல்லக்கு உற்சவத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி காட்சியளித்தார்.
இன்று இரவு கஜலட்சுமி அவதாரத்தில் பத்மாவதி தாயார் காட்சி அளிக்க உள்ளார்.
இதையொட்டி திருமலையில் இருந்து தங்கத்திலான லட்சுமி ஆரம் எடுத்து வரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.