Saturday, April 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஆன்மீகம்அயோத்தி - ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை

அயோத்தி – ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா, ஜன.,22 அன்று கோலாகலமாக நடக்கிறது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, முக்கிய சடங்குகளின் ஒரு பகுதியாக கருவறைக்குள் பால ராமர் (ராம் லல்லா) சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக, வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்த ராம் லல்லா சிலையின் படங்கள் வெளியிடப்பட்டனர்.

இன்று வெளியான படத்தில் ராமரின் முகம் முழுவதும் தெரியும் வகையிலான இந்த சிலையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்ட 51 அங்குல சிலை நேற்று (18ம்தேதி) அதிகாலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று பிற்பகல், ராம் லல்லா சிலை கருவறையில் வைக்கப்பட்டது என்று அருண் தீட்சித் தெரிவித்தார். ஜனவரி 23ம் தேதி முதல் ராமர் கோயில் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

- Advertisment -

Most Popular

Recent Comments