Tuesday, March 21, 2023
Home இந்தியா மத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி - டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள்...

மத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி – டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்

டெல்லி

மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி டெல்லியில் 5-வது நாளாக இன்றும் தொடருகிறது.

மத்திய பாஜக அரசு அண்மையில் 3 புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்டுகளுக்கானது என்பது குற்றச்சாட்டு.

ஆகையால் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டது.

டெல்லியை நோக்கி டிராக்டர்களிலும் நடைபயணமாகவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப், ஹரியானாவில் இருந்து புறப்பட்டனர். டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறாத வகையில் தடுப்புகளை ஹரியானா அரசு அமைத்திருந்தது. இந்த தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லியை நோக்கி விரைந்தனர் விவசாயிகள்.

விவசாயிகளை தடுக்கும் வகையில் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் பார்த்தனர். ஆனால் போலீசாரின் அடக்குமுறைகளை மீறி டெல்லி புராரி பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்தனர். டெல்லி புராரி மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டனர். இந்த போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.

டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலைகளிலேயே படுத்துறங்கி போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர். இன்று 5-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடருகிறது. விவசாயிகளின் இந்த பேரெழுச்சியால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments