மத்திய அரசுடனான நேற்றைய பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்ற விவசாய குழு தலைவர்கள் கூறியதாவது:
1 வருடத்திற்கு தேவையான பொருட்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கடந்த சில நாட்களாக சாலையில் தங்கியுள்ளோம். நாங்கள் சாலையிலேயே இருக்க வேண்டும் என அரசு விரும்பினால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அகிம்சை பாதையில் நாங்கள் பயணிக்கமாட்டோம். போராட்ட களத்தில் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என உளவுத்துறை உங்களுக்கு தெரிவித்திருக்கும்.
விவசாயத்தில் தனியார் துறை எங்களுக்கு தேவையில்லை. இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கம்தான் லாபம் அடையுமே தவிர விவசாயிகள் அல்ல என தெரிவித்தனர்.