Tuesday, December 6, 2022
Home இந்தியா ஆந்திராவில் 270 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

ஆந்திராவில் 270 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

விஜயவாடா

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 270 பேர் கடந்த 2 நாட்களில் மர்ம நோய் காரணமாக எலுரு நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், பொதுவான எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பும் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் அதிகமானோர் வீடு திரும்பிய நிலையில், எஞ்சியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மருத்து நிபுணர் குழுவினர் எலுருவில் முகாமிட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் எந்த பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஆந்திர சுகாதாரத்துறை மந்திரி அல நானி, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள யாருக்கும் கொரோனோ தொற்று இல்லை.மக்கள் அச்சப்பட தேவையில்லை.

உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நிலையை கண்காணித்து வருகிறார்” என்றார்.

இதற்கிடையில், எலுரு பகுதியில் குடிநீரில் ரசாயன வேதிப்பொருள் நிறைந்த மாசுபட்ட நீர் கலந்திருக்கலாம் எனவும் அதனை குடித்ததால் தான் மக்களுக்கு இவ்வாறான பாதிப்புகள் ஏற்பாடிருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகிவருகிறது. இதனால், இந்த விவகாரம் குறித்து மருத்து குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

சென்னை விமான நிலையத்தில் 2,150 கார்களை நிறுத்த வசதி – செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கார் பார்க்கிங் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள், 400...

இந்திய அணியின் வெற்றியை தடுத்த கே.எல்.ராகுலின் மிஸ்ஸிங் கேட்ச்

டாக்கா இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46...

விழிப்புணர்வு குறும்படம் – வீடு வீடாக குப்பை சேகரிக்கும் நடிகர் யோகி பாபு

சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நடிகர் யோகி பாபுவை தூய்மைப் பணியாளராக நடிக்க வைத்து குறும்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. இதில், தூய்மைப் பணியாளர்...

மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் – அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம்

விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை (நவ.19) அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த...

Recent Comments