நீலகிரி எக்ஸ்பிரஸ் என பெயர்சூட்டப்பட்டுள்ள ஊட்டி மலை ரயில் (1908 ) நூற்றாண்டு கடந்த ஓர் வரலாற்று நினைவுச் சின்னமாக உள்ளது.
மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது தெற்கு ரயில்வே. இப்போது அந்த ரயிலின் பெயர் TN43. இந்த ரயிலுக்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. ஒரு முறை சென்று வர ரயில்வேக்கு வாடகை தொகையாக ரூ.5 லட்சம் செலுத்துகிறது குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனம்.
இந்த ஊட்டி ரயில் பெட்டி ஒவ்வொன்றிலும் விமான பணிப்பெண் போல ஒரு இளம் வயது பணிப்பெண்ணை நியமித்து இருக்கிறார்கள். இரண்டு ஸ்நாக்ஸ் பொட்டலம், ஒரு தண்ணீர் பாட்டில் இலவசம். அரசு ரயில்வேயின் பழைய கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.30, தனியார் ரயிலின் புதிய கட்டணம் ரூ.3000.
இந்த கட்டணம் ஏப்ரல் முதல் ஜூலை வரை தேவையை பொறுத்து ரூ.8000 முதல் ரூ.12,000 வரை இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஸ்டேஷன் வாசலிலும் ஒரு தனியார் டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.
ஊட்டி ரயில் இனி கனவுதான். தனியார் ரயில்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஆனது அல்ல என்பது நிரூபணம் ஆகிவிட்டது.