அம்மா மினிகிளினிக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
அம்மா மினிகிளினிக் முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. தமிழக முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மினி கிளினிக்குகள் இயங்கும். அடிப்படை சிகிச்சைகள், உடல் பரிசோதனைகள் பொதுமக்களுக்கு இலவசம். மக்கள் அந்தந்த பகுதியில் சிகிச்சை பெறுவதற்கான, ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த மினி கிளிக்குகள் தொடங்கப்படுகிறது.
ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் ஒரு மருத்துவ உதவியாளர் மினி கிளிக்கில் இருப்பார்கள். தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது