நாட்டின் வடக்கு எல்லையில் எந்த அச்சுறுத்தலையில் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளது முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,லடாக் எல்லையில் இந்திய ராணுவம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது என்றார். ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் எல்லைகளை காக்க முழு உரிமை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
முப்படைகளும் எந்த சூழலையையும் எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் என்றார். வடக்கு எல்லையில் எந்த சவாலையும் ராணுவம் எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.