Sunday, June 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழக அரசு சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் கோடிக் கணக்கில் நகை, பணம் லஞ்ச ஒழிப்பு துறையால்...

தமிழக அரசு சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் கோடிக் கணக்கில் நகை, பணம் லஞ்ச ஒழிப்பு துறையால் கைப்பற்றப்பட்டது

சென்னையில் உள்ள சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரொக்கமும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னை பனகல் மாளிகையில் செயல்பட்டுவரும் சுற்றுச்சூழல் துறையின் கண்காணிப்பாளர் பாண்டியன் என்பவரது அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவு சோதனை ஒன்றை நடத்தியது.

அந்தச் சோதனையில், கணக்கில் வராத தொகை 88,500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்து வங்கியின் கணக்குப் புத்தகம் ஒன்றும் கிடைத்தது. அந்தக் கணக்கில் 38,66,220 ரூபாய் இருப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அவரது வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டது.

பாண்டியன் வீட்டிலிருந்து ரொக்கமாக ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் 1.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம், 1.51 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி, 5.40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 10.52 காரட் வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்துகளுக்கான பத்திரங்கள், நிரந்தர வைப்பு நிதியில் 37 லட்ச ரூபாய், ஒரு எடியோஸ் கார், மூன்று இரு சக்கர வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கடந்த சில நாட்களாகவே கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனைகளை நடத்திவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments