ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பேட்டியில் இந்தியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.
அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமலும், மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
புஜாரா 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அணியின் ஸ்கோர் 188 ஆக இருந்த போது விராட் கோலி 74 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.
அடுத்த 19 ரன்னுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.
சகா மற்றும் அஸ்வின் நிலைத்து நின்ற நிலையில், இந்தியா அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை சேர்த்துள்ளது.