Wednesday, September 11, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஇலவச அக்கவுண்டுகளுக்கான மீட்டிங் வரம்பை தற்காலிகமாக அகற்றியது ஜூம்

இலவச அக்கவுண்டுகளுக்கான மீட்டிங் வரம்பை தற்காலிகமாக அகற்றியது ஜூம்

உலகெங்கிலும் உள்ள இலவச கணக்குகளில் இருக்கும் நிலையான 40 நிமிட மீட்டிங் வரம்பை நீக்குவதாக ஜூம் அறிவித்துள்ளது.

வரவிருக்கும் விடுமுறை காலம் மற்றும் ஹனுக்கா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளின் காரணமாக இந்த நடவடிக்கை டிசம்பரில் சில நாட்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்பரன்சிங் சேவையான ஜூம் வெளியிட்ட இந்த அறிவிப்பின் மூலம், மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியும்.

முன்னதாக, Thanksgiving தினத்திற்கான இலவச கணக்குகளில் 40 நிமிட கால அளவை ஜூம் நீக்கியிருந்தது.

அதற்கடுத்து இப்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூம் தளத்தில் இலவச கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த தளர்வு குறித்த விவரங்களை ஜூம் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையின் மூலம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்த 40 நிமிட கால அவகாசம் என்பது தானாகவே உயர்த்தப்படும்.

பயனர்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இன்று (டிசம்பர் 17) 10 AM ET (8:30 PM IST) முதல் டிசம்பர் 19 அன்று 6 AM ET (4:30 PM IST) வரை, ஜூம் ஹனுக்காவின் கால வரம்பை உயர்த்தும்.

அதேபோல், டிசம்பர் 23 அன்று 10 AM ET (8:30 PM IST) முதல் டிசம்பர் 26 அன்று 6 AM ET (4:30 PM IST) வரை, கிறிஸ்துமஸ் காரணமாக ஜூம் வீடியோ மீட்டிங்களுக்கு நேர வரம்பு இருக்காது.

இதேபோல், புத்தாண்டுக்கு டிசம்பர் 30 அன்று 10 AM ET (8:30 PM IST) முதல் ஜனவரி 2, 2021 வரை 6 AM ET (4:30 PM IST) வரை இது பொருந்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments