Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்எடை குறைவாக 15 ஆயிரம் குழந்தைகள் - அங்கன்வாடி பணியாளர்களின் ஆய்வில் தகவல்

எடை குறைவாக 15 ஆயிரம் குழந்தைகள் – அங்கன்வாடி பணியாளர்களின் ஆய்வில் தகவல்

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால், வீடுகளுக்கு சென்று குழந்தைகளின் எடையை கண்டறியும் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் 15 ஆயிரம் குழந்தைகள் எடைகுறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று குழந்தைகளின் எடையை கண்டறியும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

கடந்த செப் டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகம் முழுவதும் 15,807குழந்தைகள் எடை குறைவாகஇருப்பதாக கண்டறியப்பட்டது.

இவர்களில், 4,100 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட காரணத்தால் மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

மீதமுள்ள குழந்தைகளுக்கு முட்டை, கீரை உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவுகளை கொடுக்கும்படி பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்ளும்போது 3 மாதத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் வயதுக்கு ஏற்ற எடை வந்துவிடும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments