Monday, October 2, 2023
Home வர்த்தகம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மெட்ரோ ரெயிலில் 31.52 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள்...

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மெட்ரோ ரெயிலில் 31.52 லட்சம் பேர் பயணம் – அதிகாரிகள் தகவல்

சென்னை

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7-ந்தேதியில் இருந்து ரெயில் சேவை படிப்படியாக தொடங்கியது. இதில் செப்டம்பரில் இருந்து டிசம்பர் 31-ந்தேதி வரை 31 லட்சத்து 52 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர். இதில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 12.30 லட்சம் பேர் பயணித்தனர். இதில் கியூ.ஆர். குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தி 83 ஆயிரத்து 813 பயணிகளும், பயண அட்டை பயணச்சீட்டை பயன்படுத்தி 18 லட்சத்து 49 ஆயிரத்து 944 பேர் பயணம் செய்தனர். மீதம் உள்ளவர்கள் டோக்கன் டிக்கெட்டை பெற்று பயணித்தனர். கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தியவர்களுக்கு 20 சதவீதமும், பயண அட்டையை பயன்படுத்தியவர்களுக்கு 10 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments