Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்ரஷியாவுடனான இந்தியாவின் "எஸ்400" ஒப்பந்தம் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் - அமெரிக்க நாடாளுமன்றம் எச்சரிக்கை

ரஷியாவுடனான இந்தியாவின் “எஸ்400” ஒப்பந்தம் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் – அமெரிக்க நாடாளுமன்றம் எச்சரிக்கை

வா‌ஷிங்டன்:

தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்றது ர‌ஷியாவின் “எஸ்400” ஏவுகணை தடுப்பு அமைப்பு. இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ர‌ஷியாவிடம் இருந்து 5 “எஸ்400” ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க 5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36 ஆயிரத்து 617 கோடி) அளவில் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியது.

ஆனால் அதை மீறியும் இந்தியா கடந்த ஆண்டு “எஸ்400” ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க முதற்கட்டமாக 800 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.5,843 கோடி) ர‌ஷியாவிடம் வழங்கியது.

இந்தநிலையில் ர‌ஷியாவிடம் “எஸ்400” ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என அமெரிக்க நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி பிரிவான நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதில், இந்தியா அதிக தொழில்நுட்ப பகிர்வு மற்றும் இணை உற்பத்தி முயற்சிகளுக்கு ஆர்வமாக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் அதிக சீர்திருத்தங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு துறையில் அதிக அந்நிய நேரடி முதலீட்டு இடைவெளிகளை அமெரிக்கா வலியுறுத்துகிறது. ர‌ஷியா தயாரித்த “எஸ்400” ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்குவதற்கான இந்தியாவின் பல பில்லியன் டாலர் ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதார தடை சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments