உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக ஒப்புதல் கிடைத்த பைசர் தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது.
போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்கள ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை பயன்படுத்தும் ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் போர்ட்டோ நகரில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வந்த சோனியா அக்விடோ என்ற 41 வயது பெண்ணுக்கு கடந்த 30-ம் தேதி பைசர் நிறுவன தடுப்பூசி போடப்பட்டது.
அவருக்கு 2 நாட்கள் வரை எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருந்த நிலையில், திடீரென அந்த ஊழியர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் போர்ச்சுகலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.