அலர்ஜி, காய்ச்சல், உடல் தளர்வு , இரத்தக் கசிவு போன்ற உடல்ரீதியான பாதிப்புகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
யாருக்கு தடுப்பூசி போடலாம் என்றும் யாருக்கு போடக்கூடாது என்றும் அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள கோவாக்சின் மருந்தைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், தீவிர நோய் பாதிப்புகள் உடையவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.