மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
55 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் சுமுகத்தீர்வு காண விரும்புவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலன்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றும், ஆனால் விவசாயிகள் வேறு ஒரு தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
நாளை பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்றம் நியமித்த பேச்சுவார்த்தைக்கான குழு, தனது முதல் கூட்டத்தை நேற்று கூட்டியது.
விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றும் அது குறித்து முடிவெடுக்க வேண்டியது டெல்லி போலீசார் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.