7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் இருந்து எந்த தகவலும் அரசுக்கு நேரடியாக வரவில்லை என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தாக்கல் செய்த ஆவணத்தை அரசுக்கு தந்தால், அதனை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும்.
எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவரே முடிவு செய்வார் என ஆளுநர் தெரிவித்திருந்தார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் குறிப்பிட்டார்.