Friday, September 29, 2023
Home சினிமா "ஓ மை கடவுளே" தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்

“ஓ மை கடவுளே” தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்

அஷ்வத் மாரிமுத்து டைரக்‌ஷனில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் “ஓ மை கடவுளே”. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் வெளியாகும் முன்பே, தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியது. தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஸ்வாக் சென் நடிக்க படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தி ரீமேக்கும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எண்டமால் சைன் இந்தியா, மெர்ரி கோ ரவுண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. “ஓ மை கடவுளே” இந்தி ரீமேக்கையும் அஷ்வத் மாரிமுத்துவே டைரக்ட் செய்ய ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தெலுங்கு ரீமேக் பணிகளை முடித்துவிட்டு, இந்தி ரீமேக் பணிகளைத் தொடங்கவுள்ளாராம் அஷ்வத் மாரிமுத்து

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments