என் பெயர் “அப்பாவு கோஸ்வாமி” என இருந்தால் எனக்கு நீதி கிடைத்திருக்குமோ என்னவோ? 2016 ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கைக்கு உட்படுத்த கோரிய திமுக வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இனிமேலும் தனக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை இல்லை எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
வட்டிக்கு பணம் வாங்கி என்னால் முடிந்த அளவுக்கு நான் போராடி விட்டேன். ஆட்சி காலமே முடிந்து விட்டது. என் தொகுதி மக்கள் புரிந்து கொள்வார்கள் என அப்பாவு தெரிவித்துள்ளார்.