திருப்பூர் அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை கொள்ளையடித்த, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த, 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து, 69 ஆயிரத்து 120 ரூபாய் ரொக்கம், கன்டெய்னர் லாரி, 2 நாட்டு துப்பாக்கி, 9 தோட்டா, வெல்டிங் மெஷின், காஸ் சிலிண்டர், பெயின்டிங் ஸ்பிரே உட்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து ஊத்துக்குளி போலீசார் கூறியதாவது:
கொள்ளையில் ஈடுபட்ட, ஆறு பேர் கும்பல், ஹரியானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு துணி லோடு ஏற்றி செல்ல, 27ம் தேதி வந்தனர்.
அன்று நள்ளிரவு திருப்பூரில் உள்ள ஏ.டி.எம் ஏதாவது ஒன்றில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். பின்னர் குறிப்பிட்ட ஏ. டி. எம்மில் கொள்ளை அடித்துள்ளனர்.