பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையை தொடர்ந்து, பழைய வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் 1ம் தேதி முதல், எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.