Wednesday, September 11, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பழங்கள்

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பழங்கள்

கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமாகிறது.

உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்காவிட்டால் தலைவலி, பசியின்மை, சரும பாதிப்பு, சோர்வு, தசை பிடிப்பு, ரத்த அழுத்த குறைவு, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

சிலவகை பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இயற்கையாகவே நீர்ச்சத்தை அதிகம் கொண்டிருக்கின்றன. அவைகளுள் ஏதாவது ஒன்றையாவது தினமும் தவறாமல் சாப்பிட வேண்டும். 80 சதவீதத்துக்கும் மேலாக நீர்ச்சத்தை மட்டுமே உள்ளடக்கிய பழங்களும் இருக்கின்றன.

பிளம்ஸ் பழம், 85 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்யும் வல்லமை கொண்டது.

ஆப்பிள் பழத்தில் 86 சதவீதம் நீர் சத்து இருக்கிறது. சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

அவகொடா பழமும் 86 சதவீதம் நீர் சத்து நிறைந்தது. இது உடலில் திரவ நிலையை சீராக பராமரிக்க உதவி செய்யும்.

அன்னாசி, ஆரஞ்சு பழங்கள் 87 சதவீதம் நீர் சத்து கொண்டவை.

முலாம் பழம் 90 சதவீதம் நீர்சத்து கொண்டது. இது கோடை வெப்பத்தை விரட்டி அடித்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் தன்மை கொண்டது.

ஆரஞ்சு வகையை சேர்ந்த ‘கிரேப் புரூட்’ உடலில் நீர் இழப்பை ஈடு செய்யக்கூடியது. இதில் 91 சதவீதம் நீர் சத்து உள்ளது.

ஸ்டாபெர்ரி பழங்கள் 92 சதவீதம் நீர் சத்து கொண்டவை. தர்பூசணியிலும் 92 சதவீதம் நீர் சத்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments